கும்பாபிஷேகத் திருப்பணிகள்




ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது பிராட்டியின் வாக்கு . இந்திய நாட்டில் தென்பாண்டிச் சீமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் பஞ்சகுருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் அருள்மிகு  அரியநாத சுவாமி ஆலயம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு (ஏழாம் நூற்றாண்டில் ) கூன் பாண்டியன் என்பவரால் முற்றுபெற்று இன்றும் நமக்கெல்லாம் அருள்பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு அரியநாதர் ஆலயம் கடந்த 1900 ஆண்டு தைமாதம் ரேவதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் ஊர் பெரியோர்களால் ( லேட் சேதுபிள்ளை மற்றும் அப்பாசுப்பையர்  ) அவர்களால் நடத்தபடுள்ளது . அதன் பின்பு 1975 இல் சில விக்ரகங்கள் பின்னமடைந்ததால் அவைகளை மட்டும் மாற்றி அமைத்துள்ளனர்.  தற்சமயம் சுமார் 112 ஆண்டுகள் ஆகியும் மகா கும்பாபிஷேகம் மற்றும் ஆலயத் திருப்பணிகள் நடைபெறவில்லை.

இப்பொழுது அரிகேசவநல்லுரில் பிறந்து வளர்ந்த  லேட் குஞ்சு என்ற சிவராமசுப்பிரமண்ய ஐயர் இரண்டாவது குமாரர் சி. கணபதி சுந்தரம் ( கீழத் தெரு) என்ற கணேசன் என்பவரும் மற்றும் ஞானப்பிரகாஷ் ( தோப்புத் தெரு) அரிகேசவநல்லூர் என்பவரும் ஸ்ரீ அரிகேசவ குபேரபுரி அறகட்டளை என ஒரு அமைப்பை துவங்கி கோவில் திருப்பணிகள் கடந்த மே 2012 லிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 இத்திருப்பணிகள்  சார்பாக இத்திருப்பணிக்குழுவின் ஒப்புதல்படி கீழ்க்கண்ட நபர்கள் கோவிலின் திருப்பணிக்கு பக்த மகாஜனங்கள் பொருள் (மணல், செங்கல், சிமெண்ட் மற்றும் இதர கட்டுமான பொருள்கள் ) மற்றும் நிதி உதவிக்கென தொடர்புகொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.


தொலைபேசி தொடர்புக்கு 
சிவத்திரு சி . கணபதி சுந்தரம் - 9944508602
 சிவத்திரு து. ஞானப்பிரகாஷ் - 9944326688
சிவத்திரு சிவாயநம, நன்மங்கலம் - 9884126417



அருள்மிகு பெரியநாயகி உடனுறை அரியநாதர் ஆலயத்திருப்பணி கும்பாபிஷேகம் 

சுவாமி கோவில் மதிப்பிடப்பட்ட செலவு விபரங்கள் 



மண்டபம் கட்டல் புதிதாக மண்டபத்தின் நிர்மாணம் முக்குருணி பிள்ளையார் 

3,19,500
காசி விஸ்வநாதர் சன்னதி ஆலயம் சம்பந்தமான வேலைகள் சம்பந்தபட்டவர்கள் மூலம் புதுப்பித்தல் புனருத்தாரணம் 

50,000
ஷண்முகர் சன்னதி மண்டபத்தை சரிசெய்து விமானம் அமைத்து புனருத்தாரணம் 

40,000
பைரவர் சன்னதி மண்டபம் முதல் மடப்பள்ளிவரை உள்ள மண்டபம் மேல்தளம் கீழ்த்தளம் புதுப்பித்தல் 

2,00,000
ஜேஷ்டாதேவி மண்டபம் புதுப்பித்தல் பிரசன்னம் பார்த்து செய்ய வேண்டும்

சிவன் மூலஸ்தானம் (கர்ப்பக்ரகம்  ) முழுவதுமாக பழுது நீக்கி சரிசெய்தல், அர்த்தமண்டபம் , மகாமண்டபமும் தொடர்ந்து தரையை சரிசெய்து பழுது பார்த்து முடித்ததல் ( தளம் எம்மாற்றமும் கிடையாது ) INCLUDING NATARAJAR GRILL FIXING.
1,00,000
உட் பிரகாரம் தளம் சரியாகப்  பதித்தல் , ஜூரதேவர் முதல் சனி பகவான் வரை சரிசெய்ய
1,00,000
சண்டிகேஸ்வரர் மண்டபம் சீரமைத்தல் புதுபித்தல் 
20,000
மூலவர் குபேரலிங்க சன்னதி தளம் அமைத்து மராமத்து செய்து புதுபித்தல் 
25,000
சிவபெருமான் விமானம் முழுவதுமாக சரிபண்ணி 43 சிலைகளுடன் வடிவமைத்தல் 
3,21,000
மேற்படி குபேரலிங்கம் சன்னதி செய்வதற்கு 
1,00,000
மரக்கதவுகள் சிவாலயத்திற்கு தேக்குமரம் மூலம் 
1,50,000
நந்தி கொடிமரம் பலிபீடம் உள்ள மண்டபத்தை கீழ்த்தளம் புதிதாகப்போட்டு இருபக்கமும் உள்ள சுவர்கள் சற்று உயர்த்தி பண்ணுதல் சதுரக்கம்பி மூலம் கிரில்கேட் அமைத்தல் ( USING WELDED MESH)
2,00,000
சிவன் கோயில் வெளிபிரகார மதில் சுவர்கள் ஒரே சீராக செய்வதற்கு
3,50,000


அம்மன் கோவில் செலவு விபரங்கள் 


கர்ப்பக்ரகம் அர்த்த மண்டபம் , மகாமண்டபம் , பள்ளியறை உட்பட தரைதளம் அமைத்தல் 
1,00,000
அம்பாள் சன்னதிக்கு 4 தேக்குமரக் கதவுகள்
1,00,000
வாகன அறை மேல்தளம் , கீழ்த்தளம் (11000 சதுரடி )
5,00,000
கம்பத்தடி விமான மண்டபங்கள் சுவர் எழுப்பி   WELDED MESH அடித்து கேட் போட்டு தளம் தயார் பண்ணுதல் 
60,000
சிவன் கோவில் வெளிப்புற மண்டபம் சீர் செய்தல் புனரமைத்தல் அம்மன் கோவில் முன் மண்டபம் , தரை புதிதாக தளசெங்கல் பதித்தல் 
6,00,000
குளம் சுற்று சுவர்கள உயரப்படுத்துதல் , தேவையானதை செய்து சரிசெய்தல் 

3,00,000
தேரடி மாடம்

கச்சேரி மண்டபம் சரிசெய்து தளம் போட
3,00,000
கும்பாபிஷேகம் செலவு
15,00,000











No comments:

Post a Comment